Friday, August 29, 2008

HAPPY BIRTHDAY NAGI

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நாகார்ஜுனாவுக்காக
இந்தப் பாடல்.
Tuesday, August 19, 2008

ஜெர்மனிக்கு கால் பேசும் சிவா பார்க்க வாங்க. :)டெடிகேட்டட் டு சிவா.

Saturday, August 9, 2008

HAPPY BIRTHDAY K R S

இன்று நம் நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் அலையஸ்
கே.ஆர்.எஸ் அவர்களுக்கு பிறந்தநாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்லா இன்பமும் அருள ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

Friday, August 8, 2008

காதலில் பிரிவு.

Wednesday, July 30, 2008

கும்மி பாட்டு

இன்று ஜீ மெயிலில் நண்பர்கள் கூடி 200க்கும் அதிகமாக
மடல்கள் இட்டு கும்மினோம்.

கும்மப்பட்டவரின் மனம் சந்தோஷப் பட

இந்தப் பாடல்.:)

Thursday, June 26, 2008

கலக்கல் காமெடி

மறக்க முடியாத இரண்டு காமெடிகளை மறக்காம பார்த்து
ஆனந்தப் படுங்க.


ஹாப்பி வீக் எண்ட் :)))))))))))

Thursday, May 29, 2008

நேயர் விருப்பம் - வல்லி சிம்ஹன் அவங்களுக்காக.

வல்லிசிம்ஹன் said...
தென்றல்,நாடோடி மன்னன் படத்தில பானுமதி பாடும் 'சம்மதமா, நான் உங்கள் கூட வர சம்மதமா' அப்படீனு பாட்டு வரும் ரொம்ப நல்லா இருக்கும். முடிஞ்சா கேட்டுப்பாருங்க. எனக்கு இந்த அப்லோட் விஷயம் தெரியாது ராஜா.

இப்படி ஒரு பின்னூட்டத்தைப் பாத்துட்டு சும்மா விடலாமா?

தேடின உடனேயே இந்தப் பாட்டு கிடைச்சது.

பொண்ணு பார்க்க போகும்போது :)))

பொண்ணு பார்க்க போகும்போது

ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு

அதிர்ச்சி நடந்திருக்கும். விசு மாதிரி

சத்தியம் வாங்கிகிட்டுதான் பாதிபேர்

கல்யாணம் செஞ்சிருப்பாங்க.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில்

பெண்பார்க்கும் படலத்தில் குடும்பப்பாட்டை

ஒவ்வொருவரும் பாடும் இந்தப் பாட்டு மறக்க

முடியாத ஒன்று.

பாட்டின் கிளைமாக்சை மாத்திரம் போட்டிருக்கேன்.

முழு பாட்டையும் பார்க்க இதோ

Monday, May 12, 2008

காதல்! காதல்!காதல்!

காதலின் இந்த ராகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அற்புதமான வரிகள். பஸ்ஸில் பயண்ப்பிதை போன்ற
ஒரு அனுபவம் தரும்.பாடலின் வரிகளாலா! படமாக்கப்பட்ட விதத்திலா!

ஏதோ ஒன்று நான் மிகவும் விரும்பும் பாடல்.


சுசீலாம்மா மற்றும் பாலுவின் குரலில் மங்காத பாடல்.
உங்களுக்கும் இதுபோல பிடித்த பாடல் இருக்குமே!

அந்த பாடலின் வரிகள், இடம்பெற்ற திரைப்படம்,
பின்னூட்டமாக போட்டாலும் சரி, உங்கள் வலைப்பூவில்
பதிவாக போட்டாலும் சரி (போட்டுவிட்டு மறக்காமல்
லிங்க் கொடுங்க)

முக்கியம் காதல் பாடல்தான் போடணும்.

(நம்ம வலைப்பதிவில் சில பேர் இப்ப
அந்த வலையில் விழுந்துட்ட மாதிரி இருக்கு.
அவங்களுக்கு வாழ்த்தா இருக்கட்டுமே :))) )

Monday, February 18, 2008

ஜோடிப் பொருத்தம்.

எனக்கு மிகவும் பிடித்த ஜோடி நதியா-சுரேஷ். பூக்களைத் தான் பறிக்காதீர்கள்
திரைப்படத்தில் "மாலை எனை வாட்டுது, மணநாளை மனம் தேடுது" எனும் பாடல் மிக விருப்பம்.

உங்களுக்கு பிடித்த ஜோடி யார்? அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம், அதிலிருந்து ஒரு பாடல்
சொல்லுங்களேன்.....

Wednesday, January 30, 2008

HAVE A BREAK

நிமிடங்களில் கதை சொல்லும் தந்திரம்,
அடிக்கடி நம் உதடுகளில் ஒலிக்கும் மந்திரம்.

விளம்பரங்களை விரும்பாதவர் உண்டா?

உங்க மனசுக்கு பிடிச்ச விளம்பரத்தை
உங்க பதிவுல போஸ்டா போட்டுட்டு
இங்க லின்க் கொடுத்து பின்னூட்டம்
போடுங்க.
கடைசி தேதி பிப்ரவரி15.

எந்த விளம்பரம் அதிகமா ரசிக்கப் பட்டிருக்கு பார்கலாமே?!!

Wednesday, January 16, 2008

கல்யாண மாலை.


.

தை பிறந்தால் வழி பிறக்கும். இது திருமணம் நடை பெறும் தைமாதம்.

தமிழ் திரைப்படங்களில் திருமணம் சம்பந்தமாக வரும் பாடல்களை இங்கே எழுதலாம். முடிந்தால் திரைப்படத்தின் பெயர் எழுதுங்கள்.

இல்லையேல் பாடல்கள் மட்டும் போதும்.

மனம் கவர்ந்த பாடல்களை சொல்லுங்கள்.

Tuesday, January 1, 2008

கானக் கந்தர்வன்
இவர் பாடும் பாடலைக் கண்களை மூடிக்கொண்டு கேட்கும் போது தலைக்கு மேலே குற்றால அருவிக் கொட்டுவது போல் இருக்கும்.


உயிர் உருகும் பாடல்கள், ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு உட்கார வைத்திருக்கிறது. கானக் கந்தர்வன், பத்மபூஷன் கே.ஜே.யேசுதாஸ். பெயர் சொன்னால் போதும்.


திரு.யேசுதாஸின் அவர்களின் பிறந்த நாள் இந்த மாதம். (10.1.1940 அவரது பிறந்த தேதி யாகும்)
அதனால் இந்த மாதம் முழுவதும் யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்களின் அந்தாக்ஷ்ரி. (அந்தாதி)

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழியில் யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்கள் மட்டும் எழுதலாம்.


ஜனவரி 31 வரை எத்தnai பாடல்கள் வருகிறது பார்ப்போம்.


வாருங்கள் கானக்கந்தர்வனின் பாடல்களின் கடலில் மூழ்கி திளைப்போம்.