Monday, February 18, 2008

ஜோடிப் பொருத்தம்.

எனக்கு மிகவும் பிடித்த ஜோடி நதியா-சுரேஷ். பூக்களைத் தான் பறிக்காதீர்கள்
திரைப்படத்தில் "மாலை எனை வாட்டுது, மணநாளை மனம் தேடுது" எனும் பாடல் மிக விருப்பம்.

உங்களுக்கு பிடித்த ஜோடி யார்? அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம், அதிலிருந்து ஒரு பாடல்
சொல்லுங்களேன்.....

23 comments:

பாச மலர் / Paasa Malar said...

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து...நல்ல பாட்டு..எனக்குப் பிடித்த ஜோடி..கமல்‍ ஸ்ரீதேவி..பாட்டு..சிப்பியிருக்குது..வறுமையின் நிறம் சிவப்பு

MyFriend said...

சித்து - ஜெனிலியா ஜோடி பொம்மரில்லு படத்துல அசத்தியிருப்பாங்க..

கோபிகா - ஸ்ரீநிவாஸ் பாடிய "பொம்மனி கீஸ்தே நீலா வுண்டி டக்கரகொச்சி ஓ முட்டிமண்டி" பாடல் சூப்பர்.. இதோ இங்க பாருங்க:
http://www.youtube.com/watch?v=0etvgFdpOrk

Sriram said...

எனக்கு பிடித்த ஜோடி கார்த்தி- ரேவதி. கிழக்கு வாசல் படத்தில்"பச்ச மலைப்பூவு" பாட்டு விருப்பம்.

கார்த்திக்-சொளந்தர்யா ஜோடிப் பொருத்தமும் நல்லா இருக்கும்.

பொண்ணுமனி படத்தில் "நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னாத் தெரியுமா" பாடல் இனிமை.

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

வாவ் அருமையானப் ஜோடி, மறக்க முடியாத பாடல்.

pudugaithendral said...

அதானே மைஃபிரண்ட் வந்தா
சித்தார்த் பாட்டு இல்லாமலா?

பொம்மரில்லு சூப்பர் படம். (தமிழ்லையும் சூப்பரா வரணும்)

அருமையான பாடலுக்கு லிங்கெல்லாம் கொடுத்து அசத்தரீங்க.

pudugaithendral said...

ஆஹா,

ரேவதி-கார்த்திக்,

கார்த்திக்-சொளந்தர்யா.

நல்ல ஜோடிப் பொருத்தம் தான்.

pudugaithendral said...

பத்மினி-சிவாஜி கணேசன் ஜோடிப் பொருத்தமும் நல்லா இருக்கும்.

தில்லானா மோகனாம்பாளில் "நலந்தானா" அருமை.

pudugaithendral said...

நிஜமா நல்லவன் சொன்னது.

//அண்ணா நகர் முதல் தெரு படத்தில் சத்யராஜும் ராதாவும் பாடும் மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு ரொம்ப பிடிக்கும்//

ம்ம்ம். நல்ல பாட்டு.

மன்னிக்கவும் நி.நல்லவன். இந்த பிளாகில் போடவேண்டிய போஸ்டை மறந்து போய் மெயின் பிளாகில் போடுவிட்டேன். உங்கள் பின்னூட்டத்தை காபி செய்து போட்டுவிட்டேன்.

cheena (சீனா) said...

பாடல் அருமை - ஜோடி : எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - படம் - அன்பே வா

சிவாஜி - ஜெயலலிதா - கலாட்டா கல்யாணம்.

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

அன்பே வா படத்தை மறக்க முடியுமா? ராஜாவின் பார்வை பாட்டு அந்த செட்டிங் சூப்பர்.

வருகைக்கு நன்றி.

மங்களூர் சிவா said...

ம்

நல்ல பாட்டு!!

எனக்கு பிடிச்ச ஜோடி

நயந்தாரா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் யாரும் இல்ல :(

ப்ச்

pudugaithendral said...

இது என்ன கொடுமை சிவா,


:)))))))))))))))

நிஜமா நல்லவன் said...

மங்களூர் சிவா said...
ம்

நல்ல பாட்டு!!

எனக்கு பிடிச்ச ஜோடி

நயந்தாரா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் யாரும் இல்ல :(

ப்ச்



ஒருவேளை நயன்தாராவுக்கு நல்ல ஜோடி அவரா இருக்குமோ?

நிஜமா நல்லவன் said...

புதுகைத் தென்றல் said...
மன்னிக்கவும் நி.நல்லவன். இந்த பிளாகில் போடவேண்டிய போஸ்டை மறந்து போய் மெயின் பிளாகில் போடுவிட்டேன். உங்கள் பின்னூட்டத்தை காபி செய்து போட்டுவிட்டேன்.





நன்றி.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

நன்றிக்கு நன்றி.

pudugaithendral said...

//மங்களூர் சிவா said...
ம்

நல்ல பாட்டு!!

எனக்கு பிடிச்ச ஜோடி

நயந்தாரா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் யாரும் இல்ல :(

ப்ச்



ஒருவேளை நயன்தாராவுக்கு நல்ல ஜோடி அவரா இருக்குமோ?//

:))))))))))))))))))

M.Rishan Shareef said...

எனக்குப் பிடிச்ச ஜோடின்னா..
பழையதுல

கார்த்திக் - ரேவதி
பாட்டு - ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
படம் - இதயத் தாமரை.

புதுசுல

பிரசன்னா-லைலா
பாட்டு - மேற்கே,மேற்கே
பனித்துளி,பனித்துளி
படம் - கண்ட நாள் முதல்

ஆர்யா - பூஜா
பாட்டு - மழை மழை
படம் - உள்ளம் கேட்குமே..

ஏதாவது ஒரு பாட்டைத் தாங்களேன் நண்பரே :)

pudugaithendral said...

வாங்க ரிஜான்,

நல்ல பாட்டுக்கள்.

இது பாட்டுக்கு பாட்டு போட்டி நடக்கற பிளாக்.

பாட்டு கிடைச்சா உங்களுக்குத் தர்ரேன்.

தமிழன்-கறுப்பி... said...

பழையபாடல்களில் நிறைள இருக்கு

இப்ப என்றால் காக்க காக்க சூர்யா ஜோதிகா பிடிக்கும் பாட்டு- ஒன்றா ரெண்டா ஆசைகள்...

அப்புறம் காதல் வைத்து காதல் வைத்து பாட்டு ஜெயம்ரவி பாவனா பிடிக்கும் தீபாவளி படத்திலிருந்து...

இன்னும் இருக்கு ஆனா பிறகொரு நாள் சொல்லுறன்...


மகளிர் தின வாழ்த்துக்கள்...

Anonymous said...

அழகான அமைதியான பாடல் இந்த பாடலில் பாலுஜியின் குரலில் ஏக்கம் ஏகத்துக்கும் பரவி இருக்கும் நன்றாக அனுபவித்து பாடியிருப்பார் நீங்களூம் மறுமுறை எனக்காக அனுபவித்து கேளுங்கள். பதிவிற்க்கு நன்றி. என் தனிப்பட்ட பதிவான தெய்வீக்ராகம் வருகைக்கும் மிக்க நன்றி.

pudugaithendral said...

வாங்க கோவை ரவி,

பாவத்தோடு பாடியிருப்பார். அதை வீணாக்கமல் சுரேஷ் நடித்திருப்பார்.

அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்த ஜோடிப் பொருத்தம் பாடல் இது.

நானானி said...

எனக்குப் பிடிச்ச ஜோடி
சிவாஜி-பத்மினி
படம் ராஜாராணி
பாடல் 'திரைபோட்டு நாமே மறைத்தாலும் காதலே..'

ஸேம் ப்ளாட்டா?

Unknown said...

எங்க ஊர்''கனவுக் கன்னி"க்கு பிறந்த நாள் வாழ்த்த வாங்க!!